மாவட்ட செய்திகள்

சயான்-தாராவி சாலையில் லாரி மீது கார் மோதி என்ஜினீயர் பலி 3 பேர் காயம் + "||" + Engineer killed, 3 injured in car-truck collision on Saiyan-Darawi road

சயான்-தாராவி சாலையில் லாரி மீது கார் மோதி என்ஜினீயர் பலி 3 பேர் காயம்

சயான்-தாராவி சாலையில் லாரி மீது கார் மோதி என்ஜினீயர் பலி 3 பேர் காயம்
சயான்-தாராவி சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர்.
மும்பை,

மும்பை தாராவி காலாகில்லா சவுக்கி பகுதியை சேர்ந்தவர் விபுல் அகவானே(வயது22). தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பர்களான சவுரப் கோரே(22), சேத்தன் தோரட்(22), ராகுல் கர்னாடே(30) ஆகியோருடன் காரில் நேற்று முன்தினம் போய்வாடாவில் வசிக்கும் நண்பரை சந்திக்க சென்றனர்.

இதன்பின்னர் நள்ளிரவு 2 மணி அளவில் சயான்-தாராவி சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இவர்களது கார் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

பலி

இந்த விபத்தில் விபுல் அகாவானே சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 3 பேரும் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பலியான விபுல் அகாவானேவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. துனிசியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 17 பேர் பலி
உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
2. தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 4 தொழிலாளர்கள் பலி 14 பேர் படுகாயம்
கடலூரில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 4 தொழிலாளர்கள் பலியானார்கள். 14 பேர் படுகாயமடைந்தனர்.
3. திருவள்ளூரில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் கே.கே.நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்.
4. மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: தாம்பரம் நகராட்சி ஒப்பந்ததாரர் பலி
சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் மோகன்பாபு (வயது 25). இவர், தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வந்தார்.
5. கும்மிடிப்பூண்டியில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; கொத்தனார் பலி
கும்மிடிப்பூண்டி பகுதியில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கொத்தனார் பலியானார்.