மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மின்வாரிய அதிகாரி கைது + "||" + Electricity officer arrested for trying to rape girl near Tiruvallur

திருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மின்வாரிய அதிகாரி கைது

திருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மின்வாரிய அதிகாரி கைது
திருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மின்வாரிய அதிகாரி கைது போக்சோ சட்டம் பாய்ந்தது.
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் (வயது 54). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உயர் மின் அழுத்த மின்சார கம்பி அமைக்கும் பணியில் சிறப்பு பிரிவு உதவி செயற்பொறியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் தன்னுடைய வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 13 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன சிறுமி இது குறித்து தன்னுடைய பெற்றோர்களிடம் கூறி உள்ளார். இது குறித்து அவரது பெற்றோர்கள் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று சுரேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் தொழில் அதிபர் கைது
சென்னையில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் தொழில் அதிபர் கைது.
2. இரிடியம் கலந்த கோபுர கலசம் விற்ற மோசடி வழக்கில் 2 பேர் கைது
இரிடியம் கலந்த கோபுர கலசம் விற்ற மோசடி வழக்கில் 2 பேர் கைது.
3. பமீலா கோஸ்வாமி போதை பொருள் வழக்கு: பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சிங், 2 மகன்கள் கைது
மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சிங் மற்றும் அவரது 2 மகன்களை போதை பொருள் வழக்கொன்றில் போலீசார் கைது செய்துள்ளனர்.
4. கோவையில் போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள் 640 பேர் கைது
கோவையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள் 640 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. நவால்னி கைது விவகாரம்: ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு ஆலோசனை
நவால்னி கைது விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் ஆலோசனை நடத்தியது.

அதிகம் வாசிக்கப்பட்டவை