மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் மீன் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Fish labor union demonstration in Nagercoil

நாகர்கோவிலில் மீன் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் மீன் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீன்தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர்களின் உண்மையான கணக்கெடுப்பை மீனவ பிரதிநிதிகளுடன் இணைந்து நடத்த வேண்டும், உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குளங்களை குத்தகைக்கு வழங்க வேண்டும், உள்நாட்டு மீனவர்களுக்கு மீனவர் வாரியத்தின் வழியாக ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தேசிய சேமிப்பு நிவாரண திட்டத்தில் ரூ.4,500 உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளையும், மீன்வளத்துறையையும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் செலஸ்டின் தலைமை தாங்கினார். ஜேசுராஜன், ஜோனி, மங்களம் ராஜ், அலெக்சாண்டர், இசக்கிமுத்து, தாமஸ், வினோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. நூர்முகமது ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில பொருளாளர் உசைன், மாவட்ட மீன் தொழிலாளர் சங்க தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

முடிவில் மீன் தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் அந்தோணி நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் முதல் முறையாக அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்: பிரியங்கா காந்தி 3-ந் தேதி நாகர்கோவில் வருகை
தமிழகத்தில் முதல் முறையாக அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்: பிரியங்கா காந்தி 3-ந் தேதி நாகர்கோவில் வருகை தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
2. நாகர்கோவிலில் சமையல் செய்யும்போது கேஸ் கசிந்து தீவிபத்து, கணவன், மனைவி 2 மகள்கள் கருகினர்
நாகர்கோவில் வடசேரியில் சமையல் செய்தபோது கேஸ் கசிந்து ஏற்பட்டு தீவிபத்தில், கணவன், மனைவி 2 மகள்கள் தீயில் கருகினர்.
3. நாகர்கோவில், நெல்லையில் இன்றும், நாளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
நாகர்கோவில், நெல்லையில் இன்றும், நாளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
4. நாகர்கோவிலில் பரிதாபம்; காதல் திருமணம் செய்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை; போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
நாகர்கோவிலில் காதல் திருமணம் செய்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
5. நாகர்கோவிலில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த எல்.ஐ.சி. முகவர் சாவு; பழுதான ‘லிப்ட்’ உயிரை பறித்த சோகம்
நாகர்கோவிலில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த எல்.ஐ.சி. முகவர் பரிதாபமாக இறந்தார். பழுதான ‘லிப்ட்‘ அவருடைய உயிரை பறித்தது.