மாவட்ட செய்திகள்

முதல் முறையாக சிவசேனா தசரா பொதுக்கூட்டம் வேறு இடத்தில் நடக்கிறது + "||" + For the first time, the Shiv Sena Dasara public meeting is being held elsewhere

முதல் முறையாக சிவசேனா தசரா பொதுக்கூட்டம் வேறு இடத்தில் நடக்கிறது

முதல் முறையாக சிவசேனா தசரா பொதுக்கூட்டம் வேறு இடத்தில் நடக்கிறது
சிவசேனா கட்சியின் தசரா பொதுக்கூட்டம் முதல் முறையாக சிவாஜி பாா்க் அல்லாத வேறு இடத்தில் நடைபெற உள்ளது.
மும்பை, 

சிவசேனா கட்சியை கடந்த 1966-ம் ஆண்டு பால்தாக்கரே தாதர், சிவாஜிபார்க் மைதானத்தில் தொடங்கினார். இதையடுத்து ஆண்டு தோறும் சிவசேனா சார்பில் சிவாஜி பார்க் மைதானத்தில் தசரா பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ளும் தசரா பொதுக்கூட்டம் சிவசேனா கட்சியின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

இந்தநிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சிவசேனா தொடங்கப்பட்ட பிறகு முதல் முறையாக அந்த கட்சியின் தசரா பொதுக்கூட்டம் சிவாஜிபார்க் அல்லாத வேறு இடத்தில் நடைபெற உள்ளது.

வீர சாவர்க்கர் அரங்கம்

சிவசேனாவின் தசரா பொது கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிவாஜி பார்க் மைதானம் எதிரில் உள்ள வீரசாவர்க்கர் அரங்கில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த கூட்டத்தில் மந்திரிகள் உள்ளிட்ட மூத்த கட்சி நிர்வாகிள் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குடும்பத்தினருடன் சிவாஜி பார்க்கில் உள்ள பால்தாக்கரே நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்னர் மாலை 7 மணியளவில் வீர சாவர்க்கர் அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார். முதல்-மந்திரியின் பேச்சு சமூகவலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆட்சி அதிகாரத்துக்காக பால்தாக்கரேவின் கொள்கைகளை சிவசேனா ஆற்றில் போட்டுவிட்டது: அமித்ஷா
ஆட்சி அதிகாரத்துக்காக சிவசேனா பால்தாக்கரேவின் கொள்கைகளை ஆற்றில் போட்டுவிட்டது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குற்றம்சாட்டி உள்ளார்.
2. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சிவசேனா மாநிலம் தழுவிய போராட்டம்; பா.ஜனதா போட்டி போராட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சிவசேனா மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது. மின்கட்டண விவகாரத்தில் மாநில அரசை கண்டித்து பா.ஜனதா போட்டி போராட்டம் நடத்தியது.
3. மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏற்றிய கன்னட கொடியை அகற்ற பெலகாவிக்குள் நுழைய முயன்ற சிவசேனா கட்சியினர்
மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏற்றிய கன்னட கொடியை அகற்றுவதற்காக, பெலகாவியில் நுழைய முயன்ற சிவசேனா கட்சியினரை போலீசார் எல்லையில் தடுத்து நிறுத்தினர்.
4. முதல்-அமைச்சருக்கு உறுதுணையாக இருப்பதால் என்னை குறிவைத்து விமர்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
கட்சி-ஆட்சி நிலைக்க முதல்-அமைச்சருக்கு உறுதுணையாக இருப்பதால் என்னை குறிவைத்து மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார் என்று எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.
5. ஏன் குறைவாக கொடுக்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்: மக்களுக்கு ரூ.2,500 கொடுப்பதை தடுக்கவில்லை எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்
‘‘மக்களுக்கு ரூ.2,500 கொடுப்பதை தடுக்கவில்லை. ஏன் குறைவாக கொடுக்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்’’ என்று எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.