மாவட்ட செய்திகள்

மராட்டிய முன்னாள் மந்திரி விநாயக்தாதா பாட்டீல் மரணம் + "||" + Former Maratha minister Vinayakada Patil dies

மராட்டிய முன்னாள் மந்திரி விநாயக்தாதா பாட்டீல் மரணம்

மராட்டிய முன்னாள் மந்திரி விநாயக்தாதா பாட்டீல் மரணம்
மராட்டிய முன்னாள் மந்திரி விநாயக்தாதா பாட்டீல் மரணம் உத்தவ்தாக்கரே இரங்கல்.
மும்பை, 

மராட்டிய முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான விநாயக் தாதா பாட்டீல் சிறுநீரக கோளாறால் அவதி அடைந்து வந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாசிக்கில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மறைந்த விநாயக்தாதா பாட்டீல் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு நெருக்கமானவர். பாட்டீலின் மறைவு குறித்து முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே டுவிட்டரில் தனது ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டார். அவர் மாநில மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக பணியாற்றியதாக புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினி, கமல் படங்களின் ஒளிப்பதிவாளர் நிவாஸ் மரணம்
தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்த பி.எஸ்.நிவாஸ் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது முதுமை காரணமாக நிவாசுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நேற்று மரணம் அடைந்தார்.
2. கொரோனா சிகிச்சை பெற்ற சினிமா பின்னணி பாடகர் மரணம்
கொரோனா சிகிச்சை பெற்ற சினிமா பின்னணி பாடகர் மரணம்.
3. பிரபல வில்லன் நடிகர் மரணம்
பிரபல வில்லன் நடிகர் நர்சிங் யாதவ். இவர் தமிழில் ரஜினிகாந்தின் பாட்ஷா, விஜய்யுடன் குருவி, விக்ரமின் ராஜபாட்டை, விஷாலுடன் பூஜை, சக்தியின் ஆட்ட நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
4. பிரபல நடிகர் மரணம்
பிரபல கன்னட நடிகரும், இயக்குனருமான புடல் கிருஷ்ணமூர்த்தி மரணம் அடைந்தார்.
5. ‘கருப்பன் குசும்புக்காரன்’ வசனம் மூலம் பிரபலமானவர்: மதுரையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற நடிகர் தவசி மரணம்
மதுரையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி மரணம் அடைந்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை