மாவட்ட செய்திகள்

ஹாவேரி அருகே குழியில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் சாவு + "||" + 3 boys drown in stagnant water near Haveri

ஹாவேரி அருகே குழியில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் சாவு

ஹாவேரி அருகே குழியில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் சாவு
ஹாவேரி அருகே, குழியில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
ஹாவேரி, 

ஹாவேரி மாவட்டம் பேடகி டவுன் பகுதியை சேர்ந்தவர்கள் அஜ்மல்(வயது 8), அக்மல்(9), ஜாபர்(12). இவர்கள் 3 பேரும் பேடகி டவுனில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று பள்ளியின் அருகே உள்ள மைதானத்தில் அஜ்மல், அக்மல், ஜாபர் ஆகிய 3 பேரும் விளையாடி கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் மைதானத்தின் அருகே தோண்டப்பட்டு உள்ள 10 அடி ஆழ குழிக்குள் 3 பேரும் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தனர். கடந்த சில தினங்களாக பேடகியில் பெய்த கனமழையால் அந்த குழிக்குள் தண்ணீர் நிரம்பி இருந்தது. இதனால் குழிக்குள் விழுந்த 3 பேராலும் வெளியே வர முடியவில்லை. அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். சிறிது நேரத்தில் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர்.

விசாரணை

இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள், சிறுவர்கள் 3 பேரும் தண்ணீரில் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பேடகி டவுன் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் அஜ்மல், அக்மல், ஜாபரின் உடல்களை மீட்டனர்.

3 பேரின் உடல்களையும் பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். இந்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. பின்னர் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பேடகி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்தில் பெண் பயணி திடீர் சாவு
சென்னை விமான நிலையத்தில் பெண் பயணி திடீர் சாவு.
2. காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் சாவு
மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.
3. வீட்டில் சமையல் செய்து சாப்பிட்ட சி.ஆர்.பி.எப். வீரர் திடீர் சாவு
வீட்டில் சமையல் செய்து சாப்பிட்ட சி.ஆர்.பி.எப். வீரர் திடீர் சாவு மனைவி, மகனுக்கு தீவிர சிகிச்சை.
4. வீட்டில் சமையல் செய்து சாப்பிட்ட சி.ஆர்.பி.எப். வீரர் திடீர் சாவு
வீட்டில் சமையல் செய்து சாப்பிட்ட சி.ஆர்.பி.எப். வீரர் திடீர் சாவு மனைவி, மகனுக்கு தீவிர சிகிச்சை.
5. பாப்பிரெட்டிப்பட்டி அருகே மேற்கூரை உடைந்ததில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மேற்கூரை உடைந்ததில் தவறி கீழே விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.