மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் காலியாக உள்ள 5,800 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் + "||" + Elections are to be held for the 5,800 vacant Gram Panchayats in Karnataka

கர்நாடகத்தில் காலியாக உள்ள 5,800 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும்

கர்நாடகத்தில் காலியாக உள்ள 5,800 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும்
கர்நாடகத்தில் காலியாக உள்ள 5,800 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு, ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு, 

கர்நாடகத்தில் காலியாக உள்ள 5,800 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சி.கொண்டய்யா மற்றும் சிலர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் மீதான விசாரணை தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் கஜேந்திரா, கிராம பஞ்சாயத்து தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது. இதுதொடர்பாக அரசுடன் கடந்த ஜூன் மாதமே ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கிராம பஞ்சாயத்து தேர்தலை தள்ளிவைக்க மாநில அரசு தான் வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எந்த விதிமுறையையும் மீறவில்லை என்று வாதிட்டார்.

கொரோனா பரவலை...

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் வாதாடும் போது, ‘கிராம பஞ்சாயத்து தேர்தல் அரசியல் காரணங்களால் நடத்தப்படாமல் இல்லை. மாநிலத்தில் கொரோனா பரவல் இருப்பதால் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போகிறது. கிராம பஞ்சாயத்து தேர்தலை நடத்த அரசும் ஆர்வமாக தான் இருக்கிறது‘ என்று கூறினார்.

அப்போது தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா குறுக்கிட்டு, ’கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் சந்தர்ப்பத்தில், அதனை மாநில அரசு திறம்பட கையாண்டது. தற்போது பீகாரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மாநிலத்தில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் கொரோனா பரவலை காரணம் காட்டி கிராம பஞ்சாயத்து தேர்தலை தள்ளிப்போடுவது சரியானது அல்ல, ’ என்று கூறினார்.

நடவடிக்கை எடுங்கள்

மேலும் அவர் கூறும் போது, கிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்தாததால், நியமன அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் பணிக்காலம் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைகிறது. அதன்பிறகு, நியமன அதிகாரிகளின் நியமனம் நீட்டிக்க கூடாது என்றும் தெரிவித்தார். அத்துடன் கிராம பஞ்சாயத்து தேர்தலை நடத்தும் விவகாரத்தில் அரசு மற்றும் மனுதாரர்கள் வருகிற 29-ந் தேதிக்குள் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஏ.எஸ்.ஓகா உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் கர்நாடகத்தில் காலியாக உள்ள 5,800 கிராம பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடத்த உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு அவர் ஒத்திவைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை தேர்தலை சந்திக்க தயார்: 24-ந்தேதி முதல் அ.தி.மு.க.வில் விருப்பமனு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில் தொண்டர்களிடம் இருந்து வரும் 24-ந்தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் இருந்து விருப்பமனுக்கள் வாங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர்.
2. சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட நாளை முதல் விண்ணப்பிக்கலாம் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
3. ஆந்திர மாநில நகராட்சி தேர்தல்: மார்ச் 10ம் தேதி நடைபெறுகிறது - மாநில தேர்தல் ஆணையம்
ஆந்திர மாநில நகராட்சி தேர்தல் மார்ச் 10ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
4. தமிழக சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்து தலைமை செயலாளர், டி.ஜி.பி.யுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை
தமிழக சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்து தலைமை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
5. ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தலை நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையரிடம் அதிமுக சார்பில் கோரிக்கை
ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை