மாவட்ட செய்திகள்

பல்வேறு இடங்களில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் + "||" + Hindu Front demonstration in various places

பல்வேறு இடங்களில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

பல்வேறு இடங்களில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஈரோடு, 

தாளவாடி பஸ்நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக திருமாவளவன் எம்.பி.யை கைது செய்ய கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மேற்கு மாவட்ட செயலாளர் நாகராஜ் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். இதில் இந்து முன்னணியினர் பலர் கலந்துகொண்டார்கள்.

பவானி

இதே கோரிக்கையை வலியுறுத்தி பவானி பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் கோபி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சிவகுமார், கார்த்திகேயன் உள்பட 10 பேர் கலந்து கொண்டார்கள்.

கவுந்தப்பாடி- டி.என்.பாளையம்

கவுந்தப்பாடி நால்ரோட்டில் ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் திருமாவளவனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முருகேசன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீதர், கவுந்தப்பாடி நகர தலைவர் இந்து செல்வன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

டி.என்.பாளையத்தில் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் இந்து முன்னணியை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அந்தந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்கவைத்தார்கள். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. 5 கோரிக்கைகளை முன்வைத்து ஐகோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
5 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை ஐகோர்ட்டு முன்பு அகில இந்திய வக்கீல்கள் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சத்தியசீலன் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் நேற்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்தும் நேற்று காலை எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சென்னை ஓட்டேரி மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. உபா சட்டத்தை திரும்ப பெற கோரி பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உபா சட்டத்தை திரும்ப பெற கோரி தஞ்சையில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
4. பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னை அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நில உரிமையாளர் மற்றும் விவசாயிகளை தரக்குறைவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குன்றத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசிக்கப்பட்டவை