மாவட்ட செய்திகள்

சின்னசேலம் அருகே பாதை பிரச்சினையால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் போராட்டம் + "||" + Relatives protest by refusing to bury the body of a person who died due to a road issue near Chinnasalem

சின்னசேலம் அருகே பாதை பிரச்சினையால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் போராட்டம்

சின்னசேலம் அருகே பாதை பிரச்சினையால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் போராட்டம்
சின்னசேலம் அருகே பாதை பிரச்சினையால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
சின்னசேலம்,

சின்னசேலம் அருகே குரால் கிராமம், மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முதுமை, விபத்து அல்லது நோய்வாய்ப்பட்டு யாராவது இறந்தால் அவர்களின் உடலை ஆட்டுப்பண்ணை அருகே செல்லும் ஓடை புறம்போக்கு பகுதியில் அடக்கம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இறந்தவர்களின் சடலத்தை எடுத்துச் செல்லும் வழியில் சுமார் 40 மீட்டர் தூரத்துக்கு தனிநபர் பட்டா பெற்று நிலத்தை சுற்றிலும் வேலி அமைத்துள்ளார். இதனால் இறந்தவர்களின் உடலை அந்த வழியாக எடுத்து செல்ல முடியாத நிலை உருவானது.

நிலத்தின் உரிமையாளர் எதிர்ப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போன சின்னப்பன்(வயது 88) என்பவரின் உடலை அடக்கம் செய்வதற்காக பட்டா நிலத்தின் வழியாக கொண்டு செல்ல முயன்றபோது நிலத்தின் உரிமையாளர் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றிருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானது. இதை அறிந்த சின்ன சேலம் தாசில்தார் வளர்மதி, வருவாய் ஆய்வாளர் காந்திமதி, கிராம நிர்வாக அலுவலர் ரங்கசாமி, கீழ்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இறந்தவரின் உடலை மாற்றுப்பாதை வழியாக ஆட்டுப்பண்ணை வழியாக எடுத்து சென்று அடக்கம் செய்யும்படி அதிகாரிகள் கூறினார்கள்.

உறவினர்கள் மறுப்பு

ஆனால் இதை ஏற்க மறுத்த கிராமமக்கள் மற்றும் உறவினர்கள் வழக்கமாக பயன்படுத்தி வந்த பாதை வழியாகத்தான் செல்வோம் இல்லை என்றால் பிணத்தை எடுத்துச் செல்ல முடியாது என கூறி இறந்தவரின் உடலை வீட்டிலேயே வைத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது. தொடர்ந்து அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எரித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல் போலீசாருடன் தள்ளுமுள்ளு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எரித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதை தடுத்த போலீசாருடன் தள்ளுமுள்ளு செய்தனர்.
2. மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாட்டுங்காவில் பா.ஜனதாவினர் போராட்டம்
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாட்டுங்காவில் பா.ஜனதாவினர் போராட்டம் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
3. 43-வது நாளாக மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சிதம்பரம் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை
43-வது நாளாக நேற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிதம்பரம் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. விடுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. ராதாபுரம் அருகே தோட்டத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல்
ராதாபுரம் அருகே தோட்ட கம்பிவேலியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா? - நாளை மீண்டும் பேச்சுவார்த்தை
3 வேளாண் சட்டங்களையும் நிறுத்தி வைக்க மத்திய அரசு முன் வந்துள்ளது. இதனால் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.