மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 143 பேர் பாதிப்பு + "||" + In Chengalpattu district, 143 people were affected by the corona infection in a single day

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 143 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 143 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 143 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 143 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 801 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 40 ஆயிரத்து 897 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்தனர்.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 665 ஆக உயர்ந்தது. 1,239 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 133 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 37 ஆயிரத்து 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 35 ஆயிரத்து 421 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,233 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 615 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்துள்ளார்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 42, 58, 42 வயதுடைய ஆண்கள், மணிமங்கலம் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஆண், எழிச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஆண், 22 வயதுடைய ஆண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 119 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 182 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 24 ஆயிரத்து 345 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 377 பேர் உயிரிழந்துள்ளனர். 460 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 150 ஆக உயர்வு
இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 150 ஆக உயர்வடைந்து உள்ளது.
2. கர்நாடகத்தில் புதிதாக 674 பேருக்கு கொரோனா சுகாதாரத்துறை தகவல்
கர்நாடகத்தில் புதிதாக 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
3. மராட்டியத்தில் மேலும் 2,779 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் மேலும் 2 ஆயிரத்து 779 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
4. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 18 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் நெல்லை மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள்.
5. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 18 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் நெல்லை மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள்.