மாவட்ட செய்திகள்

பெதப்பம்பட்டி அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் அப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை + "||" + Public demand for disposal of roadside rubbish near Pettapampatti

பெதப்பம்பட்டி அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் அப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை

பெதப்பம்பட்டி அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் அப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை
குடிமங்கலம் அருகே நெடுஞ்சாலை ஓரம் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குப்பையை அப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளகர்.
குடிமங்கலம், 

பொள்ளாச்சியிலிருந்து பெதப்பம்பட்டி, குடிமங்கலம் வழியாக தாராபுரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதன் வழியாக தினமும் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகிறது. பெதப்பம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உப்பாறு ஓடையின் குறுக்கே போக்குவரத்து வசதிக்காக பாலம் கட்டப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழகத்தின் உள்ள பகுதிகளுக்கு மட்டுமின்றி பக்கத்து மாநிலமான கேரளாவுக்கும் வாகனங்கள் சென்று வருகின்றன. பெதப்பம்பட்டி அருகே உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது மேல் பகுதியிலும் கட்டிட கழிவுகள் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலங்களில் உப்பாறு ஓடையின் வழியாக செல்லும் நீர் மாசடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கை

பாலத்தின் வழியாக பகல் நேரங்களில் போக்குவரத்து அதிகமுள்ள நிலையில் இரவு நேரங்களில் மட்டுமே குப்பை கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகள் கொட்டப்படுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மீது போலீசார் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். குப்பை கழிவுகளை கொட்டும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் குப்பை கொட்டும் செயல் தொடர்ந்து நடைபெற்று வந்தால் நெடுஞ்சாலை குப்பைத் தொட்டியாக மாறும் அவலம் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. விழாக்கால சிறப்பு ரெயில்களின் கட்டணத்தை குறைக்க வேண்டும் ரெயில்வே தொழிற்சங்கம் கோரிக்கை
தெற்கு ரெயில்வேயில் இயக்கப்பட்டு வரும் விழாக்கால சிறப்பு ரெயில்களின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ) கோரிக்கை வைத்துள்ளது.
2. குப்பை கூளமாக காட்சியளிக்கும் புறநகர் மின்சார ரெயில்கள் ரெயில்வே நிர்வாகம் பராமரிக்க பயணிகள் கோரிக்கை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்கள் எந்தவித பராமரிப்பும் இன்றி குப்பைகூளமாக காட்சியளிக்கிறது என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். ரெயில்வே நிர்வாகம் அதனை பராமரிக்க கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
3. பொது மாறுதலுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் - தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
பொது மாறுதலுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. மூடப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை
மயிலாடுதுறை அருகே மூடப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. 2 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மத்திய ரிசர்வ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மீட்டுத்தர குடும்பத்தினர் கோரிக்கை
2 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மத்திய ரிசர்வ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மீட்டுத்தர குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை