மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கிசுடும் திறன் போட்டி: கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு 2-ம் பரிசு + "||" + Shooting Competition for Police Officers: 2nd Prize to Commissioner Maheshkumar Agarwal

போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கிசுடும் திறன் போட்டி: கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு 2-ம் பரிசு

போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கிசுடும் திறன் போட்டி: கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு 2-ம் பரிசு
போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் திறன் போட்டியில் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் 2-ம் பரிசு பெற்றார். கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், பெண் இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
சென்னை, 

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மருதம் வளாகத்தில் தமிழக போலீஸ்துறையின் செயலாக்கம் பிரிவின் சார்பில் சென்னை போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கிசுடும் திறன் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, நுண்ணறிவுப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, சென்னை பாதுகாப்பு பிரிவு மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகிய சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முதல் உயர் அதிகாரிகள், போலீஸ் கமிஷனர் என 536 போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முதல் 3 இடங்களை...

துப்பாக்கிசுடும் திறன் போட்டி பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இதில் 20 போலீஸ் அதிகாரிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகினர். சமீபத்தில் இறுதிபோட்டி நடைபெற்றது. 10 அடி, 15 அடி மற்றும் 20 அடி தூரத்தில் நின்று இலக்கை குறி பார்த்து சுடும் வகையில் இறுதிப்போட்டி நடந்தது.

இதில் சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர்(தலைமையிடம்) ஏ.அமல்ராஜ், கிண்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.லட்சுமி ஆகியோர் முதல் பரிசையும், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் 2-வது பரிசையும், இணை கமிஷனர் (கிழக்கு மண்டலம்) ஆர்.சுதாகர் 3-வது பரிசையும் பெற்றனர்.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை கூடுதல் டி.ஜி.பி.(செயலாக்கம்) ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், ஜெயச்சந்திரன் உள்பட போலீஸ் அதிகாரிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 10 அணிகள் பங்கேற்கும் சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து போட்டி நாளை தொடக்கம்
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் டாக்டர் ரேலா மருத்துவ மையம், ஆச்சி குரூப் ஆப் கம்பெனிகள் ஆதரவுடன் சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி நாளை (செவ்வாய்கிழமை) முதல் 10-ந்தேதி வரை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா அணி அரைஇறுதிக்கு தகுதி
11 அணிகள் இடையிலான 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது.
3. சர்வதேச குத்துச்சண்டை போட்டி
சர்வதேச குத்துச்சண்டை போட்டி இன்று முதல் 7-ந்தேதி வரை ஸ்பெயினில் நடக்கிறது.
4. சென்னை புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி 5, 6, 7-ந் தேதிகளில் நடக்கிறது
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 44-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
5. சைக்கிள் போட்டி: துபாய் நகரில், முக்கிய சாலைகள் நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது
சைக்கிள் போட்டி: துபாய் நகரில், முக்கிய சாலைகள் நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது.