மாவட்ட செய்திகள்

சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு உடலை வயல்வெளியில் எடுத்து செல்லும் அவலம் + "||" + It is a pity that the fiery path carries the aggressive body into the field

சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு உடலை வயல்வெளியில் எடுத்து செல்லும் அவலம்

சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு உடலை வயல்வெளியில் எடுத்து செல்லும் அவலம்
இறந்து போனவரின் உடலை சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு காரணமாக வயல்வெளியில் எடுத்து செல்லும் அவலம் நீடிக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியம் மோவூர் ஊராட்சிக்கு உட்பட்டது மோவூர் கண்டிகை கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சுடுகாட்டு பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளதால் இங்கு யாரேனும் இறந்தால் அவர்ளின் உடலை எடுத்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலைதான் நீடிக்கிறது.

மோவூர் கண்டிகை ஊராட்சி சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சீரமைக்க கோரி பலமுறை அந்த பகுதி மக்கள் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார், கலெக்டர், ஆர்.டி.ஓ. என பலரிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பொதுமக்கள் கோரிக்கை

இந்த நிலையில் நேற்று மோவூர்கண்டிகையை சேர்ந்த ஒருவர் இறந்து போனார். அவரது உடலை வயல்வெளி வழியாக மிகுந்த சிரமத்துடன் எடுத்து சென்றனர். சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சீரமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டிற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்ததால் தகராறு: மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளித்து தற்கொலை கணவன்-மனைவி கைது
ஆவடி அருகே வீட்டிற்கு செல்லும் பாதையை பக்கத்து வீட்டுக்காரர் ஆக்கிரமித்ததால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்தார்.
2. மயான ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி இறந்தவர் உடலுடன் சாலை மறியல் தொட்டியம் அருகே பரபரப்பு
தொட்டியம் அருகே மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஒரு சமுதாய மக்கள், இறந்தவரின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. அரசுக்கு சொந்தமான குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கீழ்வேளூர் அருகே அரசுக்கு சொந்தமான குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. தென்காசி அருகே நடிகர் வடிவேலு பாணியில் ‘கிணற்றை காணவில்லை’ என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
தென்காசி அருகே நடிகர் வடிவேலு பாணியில் கிணற்றை காணவில்லை என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.