மாவட்ட செய்திகள்

கோவையில் மோடியின் மகள் திட்டம் தொடக்கம் + "||" + Modi's daughter project launched in Coimbatore

கோவையில் மோடியின் மகள் திட்டம் தொடக்கம்

கோவையில் மோடியின் மகள் திட்டம் தொடக்கம்
மோடியின் மகள் என்ற இந்த திட்டத்தில் 100 பெண் குழந்தைகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
கோவை, 

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் மோடியின் மகள் திட்டம் தொடக்க விழா கோவை காந்திபுரம் கமலம் துரைசாமி ஹாலில் நடந்தது. தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் உள்ள பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டத்தை கோவையில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதிசீனிவாசன் கலந்து தொடங்கி வைத்து பேசியதாவது:-

மோடியின் மகள் என்ற இந்த திட்டத்தில் 100 பெண் குழந்தைகள் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் பதிவு செய்து கொண்டுள்ள பெண் குழந்தைகளின் பெயர்களில் வங்கிகளில் கணக்கு தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படும். 5 ஆண்டுகாலத்திற்கு பிறகும் அந்த குழந்தைகளின் படிப்புக்கு நிதி உதவி அளிக்கவும் தயாராகவும் உள்ளோம். பிரதமர் மோடி எந்த ஒரு திட்டத்தை அமல்படுத்தினாலும் அது பெண்களின் முன்னேற்றத்திற்கு எந்த வகையில் பலன் அளிக்கும் என்பதை அடிப்படையாக வைத்திருக்கிறார். நாட்டில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளன. பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக மோடி அமல்படுத்தி வருகிறார். அவர் கொண்டு வந்த செல்வமகள் திட்டத்தில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நகரப்புற பெண்களுக்கு தொழில் தொடங்கவும், கிராமப்புற பெண்களுக்கு கழிப்பிடம், வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. மா.சின்னராசு, சபரிகிரிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்கவிழாவையொட்டி பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு சேலை மற்றும் நலத் திட்ட உதவிகளும், பிரதமர் நரேந்திரமோடியின் போட்டோவும் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஏற்றுமதி மீண்டும் தொடக்கம்
சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை மீண்டும் தொடங்கி உள்ளது.
2. குஜராத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை முதல் மீண்டும் தொடக்கம்
குஜராத்தில் நாளை முதல் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன.
3. தமிழ்நாடு உள்பட 38 அணிகள் பங்கேற்கும் முஷ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் இன்று தொடக்கம்
தமிழ்நாடு உள்பட 38 அணிகள் பங்கேற்கும் முஷ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் இன்று தொடக்கம்.
4. புதிய கட்சியை தொடங்குவதை உறுதி செய்தார் அமரிந்தர் சிங்...!
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் 117 இடங்களிலும் போட்டியிடப்போவதாக முன்னாள் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.
5. ‘ரெட் சிக்னலில் என்ஜின் நிறுத்தம்’ திட்டம்; வரும் 18ல் டெல்லியில் மீண்டும் தொடக்கம்
டெல்லியில் ‘ரெட் சிக்னலில் என்ஜின் நிறுத்தம்’ திட்டம் வருகிற 18ந்தேதியில் இருந்து மீண்டும் தொடங்கப்படுகிறது.