மாவட்ட செய்திகள்

நர்சிங் மாணவியை கொலை செய்த அண்ணன் கைது பரபரப்பு வாக்குமூலம் + "||" + The arrest of the brother who murdered the nursing student is a sensational confession

நர்சிங் மாணவியை கொலை செய்த அண்ணன் கைது பரபரப்பு வாக்குமூலம்

நர்சிங் மாணவியை கொலை செய்த அண்ணன் கைது பரபரப்பு வாக்குமூலம்
நர்சிங் மாணவியை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நெல்லை,

பாளையங்கோட்டை இலந்தைகுளம் சாஸ்தா தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகள் சரஸ்வதி (வயது 25.) நர்சிங் கல்லூரி மாணவியான இவர் நேற்று முன்தினம் இரவில் அங்குள்ள தெருக்குழாயில் தண்ணீர் பிடித்தபோது, அங்கு வந்த அவருடைய அண்ணன் நல்லையா என்ற குட்டிதாஸ் (30) திடீரென்று சரஸ்வதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை அரிவாளால் வெட் டிக் கொலை செய்தார்.

பின்னர் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் ரத்தம் தோய்ந்த அரிவாளுடன் சென்று சரணடைந்த குட்டியை போலீசார் கைது செய்தனர். கைதான குட்டி போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

பணம் தர மறுத்ததால்...

என்னுடைய தங்கை சரஸ்வதி நர்சிங் கல்லூரியில் படித்தபோதே, அவருக்கு தையல் கலை தெரிந்ததால், ஓய்வுநேரத்தில் துணிகளை தைத்து விற்பனை செய்தார். மேலும் கவரிங் நகைகளையும் வாங்கி விற்பனை செய்து வந்தார். இதன் மூலம் அவர் படிக்கும்போதே அதிகளவு பணமும் சம்பாதித்ததால் என்னை மதிப்பது இல்லை.

மேலும் சரஸ்வதி அடிக்கடி செல்போனில் சிலரிடம் பேசிக் கொண்டே இருந்தார். இதனைக் கண்டித்ததால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் சரஸ்வதியிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டேன். ஆனால் அவர் பணம் தர மறுத்ததுடன் என்னை அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் தங்கை என்றும் பாராமல் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தேன்.

இவ்வாறு கைதான குட்டி வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் குட்டியை போலீசார் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது போல் நாடகமாடி, விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் நூதன திருட்டு; வாலிபர் கைது
ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது போல் நாடகமாடி விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் நூதன முறையில் திருடப்பட்டது.
2. நூதன முறையில் 3.46 கிலோ தங்கம் கடத்தல்; துபாயில் இருந்து தமிழகம் வந்த 5 பேர் கைது
துபாயில் இருந்து தமிழகம் வந்த 5 பேரிடம் இருந்து ரூ.1.75 கோடி மதிப்பிலான 3.46 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது.
3. மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி உரிமையாளர் காருடன் மாயமான கடை ஊழியர் கைது
கோபி அருகே மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி கடை உரிமையாளர் காருடன் மாயமான ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
4. காஞ்சீபுரத்தில் திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை; கணவர் கைது
திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் கைது செய்யப்பட்டார்.
5. பல்லடம் அருகே குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது; 400 கிலோ குட்கா பறிமுதல்
பல்லடம் அருகே அம்மாபாளையத்தில் குட்கா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.