மாவட்ட செய்திகள்

கொடுத்த நகையை திருப்பி கேட்ட நண்பனை கொலை செய்த வாலிபர் கைது + "||" + Asked to return the given jewelry Youth arrested for killing friend

கொடுத்த நகையை திருப்பி கேட்ட நண்பனை கொலை செய்த வாலிபர் கைது

கொடுத்த நகையை திருப்பி கேட்ட நண்பனை கொலை செய்த வாலிபர் கைது
உல்லாஸ்நகரில் கொடுத்த நகையை திருப்பி கேட்ட நண்பனை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மும்பை, 

தானே மாவட்டம் உல்லாஸ்நகர் பகுதியை சோ்ந்தவர் கைலாஷ். தொழில் அதிபர். இவரது மகன் பவன்(வயது25). கடந்த 16-ந் தேதி தொழில் அதிபர் ஹில்லைன் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் 3 நாட்களாக மகன் பவனை காணவில்லை என கூறியிருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே உல்லாஸ்நகர் பகுதியில் நேற்று முன்தினம் காரில் இருந்து அழுகிய நிலையில் உடல் ஒன்று மீட்கப்பட்டது. விசாரணையில், அது மாயமான பவன் என்பது தெரியவந்தது. யாரோ அவரை கொலை செய்து காரில் போட்டு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

நகைக்காக கொலை

இதையடுத்து போலீசார் பவனுடன் கடைசியாக போனில் பேசிய அவரது நண்பன் தீபக்கை(30) பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் பவனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

பவன் தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகைகளை எடுத்து தீபக்கிடம் கொடுத்து உள்ளார். இதில் அவர் அந்த நகைகளை திருப்பி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் தீபக், பவனை கொலை செய்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. பல்லடம் அருகே குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது; 400 கிலோ குட்கா பறிமுதல்
பல்லடம் அருகே அம்மாபாளையத்தில் குட்கா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
2. கைதிகளுக்கு போதைப்பொருள் சப்ளை சிறை காவலர் கைது
கைதிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தது தொடர்பாக சிறை காவலர் கைது செய்யப்பட்டார்.
3. குடும்பத்தகராறில் மகள் கண் எதிரே பயங்கரம்; இரும்பு குழாயால் அடித்து 2-வது மனைவி கொலை; இறைச்சி வியாபாரி கைது
குடும்பத் தகராறில் மகள் கண் எதிரேயே இரும்பு குழாயால் அடித்து 2-வது மனைவியை கொலை செய்த இறைச்சி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
4. பணி நிரந்தரம் செய்யக்கோரி பி.ஆர்.டி.சி. ஒப்பந்த ஊழியர்கள் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டம் 30 பேர் கைது
பணி நிரந்தரம் செய்யக்கோரி பி.ஆர்.டி.சி. ஒப்பந்த ஊழியர்கள் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. திருவள்ளூர் மாவட்டத்தில் முன்விரோதத்தில் வாலிபருக்கு கொலை மிரட்டல்; 4 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான கார்த்திக், தினேஷ் ஆகியோருடன் செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.