மாவட்ட செய்திகள்

தனியார் மருத்துவமனையில் டெங்கு கொசுப்புழு: கட்டிட ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் + "||" + Dengue worm in private hospital: Building contractors fined Rs 10,000

தனியார் மருத்துவமனையில் டெங்கு கொசுப்புழு: கட்டிட ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

தனியார் மருத்துவமனையில் டெங்கு கொசுப்புழு: கட்டிட ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி டெங்கு கொசுப்புழுக்களை ஒழிக்க மாவட்ட மலேரியா அலுவலர் முனுசாமி, மக்கள் நல அலுவலர் சரவணன், 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு கொசுப்புழுக்கள் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

அங்கு கட்டப்பட்டு வரும் கட்டிடப்பகுதிகளில் 2 இடங்களில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட 2 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. மீண்டும் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வழிமுறை பின்பற்றாதோருக்கு அபராதம்: சென்னை மாநகராட்சியில் ரூ.3½ கோடி வசூல்
சென்னையில் பல்வேறு தளர்வுகளுடன் இயங்கும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் பின்பற்ற வேண்டிய கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அவ்வப்போது அரசு அறிவித்து வருகிறது.
2. தஞ்சை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ. 79 ஆயிரம் பறிமுதல்
தஞ்சை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.79 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
3. வேதாரண்யம் அருகே 2 வீடுகளின் கதவை உடைத்து 18 பவுன் நகைகள்- ரூ.40 ஆயிரம் கொள்ளை
வேதாரண்யம் அருகே 2 வீடுகளின் கதவை உடைத்து 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
4. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்காத பொதுப்பணித்துறை அதிகாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்காத பொதுப்பணித்துறை அதிகாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டார்.
5. உத்தரவை மீறி முடி திருத்தம் செய்ததால் குடும்பத்துடன் ஊரை விட்டு ஒதுக்கிவைப்பு; ரூ.50 ஆயிரம் அபராதம்
உத்தரவை மீறி முடி திருத்தம் செய்ததால் சலூன் கடைக்காரரை குடும்பத்துடன் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததுடன், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி அவர் தாசில்தாரிடம் புகார் செய்துள்ளார்.