மாவட்ட செய்திகள்

உடன்குடி பகுதியில் உள்ள 2 குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிட கோரிக்கை + "||" + Request to open water for 2 ponds in Udankudi area

உடன்குடி பகுதியில் உள்ள 2 குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிட கோரிக்கை

உடன்குடி பகுதியில் உள்ள 2 குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிட கோரிக்கை
உடன்குடி பகுதியில் உள்ள 2 குளங்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
உடன்குடி, 

உடன்குடி பகுதியில் தாங்கைகுளம், தருவைகுளம் என 2 குளங்கள் உள்ளன. இந்த 2 குளங்களுக்கும் இதுவரை தண்ணீர் வரவில்லை. இதனால் தண்ணீருக்காக அந்த குளங்கள்ஏங்குகின்றன.

அதே நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் அணை வழியாக தினமும் கடலுக்கு மழைநீர் வீணாக செல்கிறது. குளங்கள் வறண்டு கிடக்கும் நிலையில் தண்ணீர் கடலுக்கு வீணாக செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

தண்ணீர் திறந்துவிட கோரிக்கை

மேலும் சாத்தான்குளம், உடன்குடி வழியாக செல்லும் கருமேனி ஆற்றிலும் தண்ணீர் வரவில்லை. தாங்கைகுளம், தருவைகுளம் நிரம்பி மறுகால் பாய்ந்தால் இந்த ஆற்றில் தண்ணீர் அதிகளவில் வரும். இதன்மூலம் ஆற்றில் உள்ள ஏராளமான தடுப்பணைகள் மற்றும் ஊருணிகள் நிரம்பும். இதனால் அந்த பகுதியில் உள்ளவிவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம்பாதுகாக்கப்படும்.

எனவே தாங்கைகுளம், தருவைகுளம் நிரம்பும் வகையில் அணையில் இருந்து கால்வாயில் அதிகளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டிற்குள் மழைநீர் புகுந்து வசிக்க முடியாத நிலை: யாரும் கண்டுகொள்ளாததால் தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்த 3 பேர்
வீட்டிற்குள் மழைநீர் புகுந்து வசிக்க முடியாத நிலையில் யாரும் தங்களை கண்டுகொள்ளாததால் தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்த 3 பேரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
2. ஆண்டிமடம் விளந்தை பகுதியில் தெருக்கள், சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்
ஆண்டிமடம் விளந்தை பகுதியில் தெருக்கள், சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதை தவிர்க்க அப்பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. குளித்தலை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
குளித்தலை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. இரண்டு வார காலமாக கூத்தியம்பேட்டை கிராமத்தில் குடியிருப்பை சூழ்ந்திருக்கும் மழைநீர்
கூத்தியம்பேட்டை கிராமத்தில் இரண்டு வார காலமாக குடியிருப்பை சூழ்ந்திருக்கும் மழைநீரை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா? என அந்த பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
5. தொடர் மழையால் மாமல்லபுரம் புலிக்குகையை மழைநீர் சூழ்ந்தது
தொடர் மழையால் மாமல்லபுரம் புலிக்குகை புராதன சின்னம் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.