செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 47 ஆயிரத்தை தாண்டியது + "||" + The incidence of corona infection in Chengalpattu district has crossed 47 thousand
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 47 ஆயிரத்தை தாண்டியது
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 90 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 90 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 72 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 45 ஆயிரத்து 518 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 708 ஆக உயர்ந்தது. 846 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 73 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒருவர் நோய் தாக்குதலால் பலியானார். சிகிச்சை பெற்ற 103 பேர் குணம் அடைந்தனர். இதுவரை இந்த மாவட்டத்தில் மொத்தம் 40 ஆயிரத்து 501 பேர் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர்.
மொத்தம் 39 ஆயிரத்து 287 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தனர். மொத்தம் 650 பேர் இறந்துள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 73 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 375 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 26 ஆயிரத்து 589 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது வரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 419 பேர் உயிரிழந்துள்ளனர். 367 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 56 ஆயிரத்து 430 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.