நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் நேற்று 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 727 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14 ஆயிரத்து 145 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 128 பேர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் இதுவரை 207 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 ஆயிரத்து 792 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 64 பேர் தென்காசி மற்றும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 155 பேர் பலியாகி உள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 588 ஆக உள்ளது. இதில் 15 ஆயிரத்து 340 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 113 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 135 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.
60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக கோ-வின் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யும் வசதி, நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தொடங்கியது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதன் 2-வது கட்டமாக 60 வயதை எட்டிய அனைவருக்கும், இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கும் கடந்த திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து மேற்கொண்ட பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றை ஒரே இடத்தில் அதாவது மராட்டிய தலைநகர் மும்பையில் உள்ள 4 ஸ்டேடியங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது.