திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 72 பேர் குணமடைந்தனர் மேலும் 58 பேருக்கு பாதிப்பு + "||" + In Tirupur district, 72 people were treated for corona and 58 were injured
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 72 பேர் குணமடைந்தனர் மேலும் 58 பேருக்கு பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 72 பேர் குணமடைந்தனர். மேலும், நேற்று 58 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர்,
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு 5 ஆயிரமாக இருந்தது தற்போது குறைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மட்டும் தமிழகத்தில் மொத்தம் 1, 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் மேலும் புதியதாக 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
72 பேர் குணமடைந்தனர்
இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 962-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனா பலியும் அவ்வப்போது இருந்து வருகிறது. இதற்கிடையே நேற்று கொரோனா பலி ஏதுவும் இல்லை.
இதுபோல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 72 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களை 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 14 ஆயிரத்து 145 பேர் குணமடைந்துள்ளனர். 610 பேர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.