மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா; முதியவர் பலி + "||" + Corona for 48 in Erode district; The old man kills

ஈரோடு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா; முதியவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா; முதியவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 50-க்கும் கீழ் குறைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் ஈரோடு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 12 ஆயிரத்து 554 ஆக உயர்ந்தது. இதற்கிடையில் ஈரோடு குமலன்குட்டை பகுதியை சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 28-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

முதியவர் பலி

இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 26 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதுவரை மொத்தம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 980 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ள 434 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 3,005 பேருக்கு தொற்று அமீரகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
புதிதாக 3,005 பேருக்கு தொற்று அமீரகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.
2. அபுதாபியின் மஸ்தார் சிட்டி பகுதியில் புதிய கொரோனா தடுப்பூசி மையம்
அபுதாபியின் மஸ்தார் சிட்டி பகுதியில், புதிய கொரோனா தடுப்பூசி மையம் நேற்று திறக்கப்பட்டது.
3. மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா
மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா
4. அமீரகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,105 ஆக குறைந்தது 3,355 பேர் குணமடைந்தனர்
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 56 ஆயிரத்து 430 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. வருகிற நாட்களில் கொரோனாவை தடுக்க தடுப்பூசியும், சமூக இடைவெளியும் போதுமானது; ஆய்வில் தகவல்
வருகிற நாட்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசியும், சமூக இடைவெளியும் போதுமானது என ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை