மாவட்ட செய்திகள்

ஊத்துக்கோட்டை பகுதிகளில் ஹெம்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்; போலீஸ் துணை சூப்பிரண்டு எச்சரிக்கை + "||" + Penalty for driving a two-wheeler without wearing a helmet in the Uthukottai area; Police deputy superintendent alerted

ஊத்துக்கோட்டை பகுதிகளில் ஹெம்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்; போலீஸ் துணை சூப்பிரண்டு எச்சரிக்கை

ஊத்துக்கோட்டை பகுதிகளில் ஹெம்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்; போலீஸ் துணை சூப்பிரண்டு எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை போக்குவரத்து போலீசார் சார்பில் ஹெமல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சப்-இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு முன்னிலை வகித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது, இருசக்கர வாகனத்தில் ஓட்டுபவர் மற்றும் உடன் பயணிப்பவர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டக் கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம். சீட் பெல்ட் அணிந்து கார் மற்றும் இதர வாகனங்களை ஓட்ட வேண்டும். சாலை விபத்துகளில் அதிகமாக மரணிப்பவர்கள் ஹெல்மெட் அணியாதவர்கள் தான் என்று சமீபத்தில் ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். பின்னர் அவர், ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 5,398 பேருக்கு ரூ.11¼ லட்சம் அபராதம்
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத 5,398 பேரிடம் இருந்து அபராதமாக ரூ.11½ லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
2. முககவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்ற 169 பேருக்கு அபராதம்
முககவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்ற 169 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
3. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
4. கடை வியாபாரிகளுக்கு அபராதம்
சிங்கம்புணரியில் தடையை மீறி வாரச்சந்தை நடத்த கடை அமைத்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.