மாவட்ட செய்திகள்

அரசு சார்பில் பிறந்த நாள் விழா: ராணி வேலு நாச்சியார் உருவச்சிலைக்கு அமைச்சர் மாலை அணிவிப்பு + "||" + Birthday Celebration on behalf of the Government: Minister evening parade for the statue of Rani Velu Nachiyar

அரசு சார்பில் பிறந்த நாள் விழா: ராணி வேலு நாச்சியார் உருவச்சிலைக்கு அமைச்சர் மாலை அணிவிப்பு

அரசு சார்பில் பிறந்த நாள் விழா: ராணி வேலு நாச்சியார் உருவச்சிலைக்கு அமைச்சர் மாலை அணிவிப்பு
சிவகங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் மாலை அ ணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை,

ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன்முதலில் சுதந்திர போரை தொடங்கியவர் சிவகங்கையை ஆண்ட ராணி வேலு நாச்சியார். தமிழக அரசு இவருக்கு சிவகங்கையில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 3-ந்்தேதியன்று அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.

இந்த ஆண்டு ராணி வேலு நாச்சியாரின் 291-வது பிறந்த நாள் விழா சிவகங்கையில் அமைந்துள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நாகராஜன் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் ராஜகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்மணிபாஸ்கரன், பாம்கோ கூட்டுறவு சங்கத்தலைவர் நாகராஜன், ஆவின் கூட்டுறவு சங்கத்தலைவர் அசோகன், மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜா, எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணை செயலாளர் கருணாகரன், சிவகங்கை இளையமன்னர் மகேஸ்துரை உள்பட பலர் பலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் மாலை அணிவிப்பு
கடலூரில் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
2. நினைவு தினம் அனுசரிப்பு: எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
3. தஞ்சையில், பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தினர்-பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி
நினைவு தினத்தையொட்டி தஞ்சையில் பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
4. நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி
நினைவு தினத்தையொட்டி தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
5. திருச்சி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
எம்.ஜி.ஆர்.சிலைக்கு அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.