மாவட்ட செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி + "||" + Nammazhvar Motsam at Srirangam Renganathar Temple

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்ற நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீரங்கம்,

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம்(டிசம்பர்) 14-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான கடந்த 25-ந் தேதி நடைபெற்றது. உற்சவத்தின் 7-ம் நாளான கடந்த 31-ந் தேதி திருக்கைத்தல சேவை நடைபெற்றது. 8-ம் நாளான இம்மாதம் 1-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.

10-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி நம்பெருமாள் அன்று இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நம்மாழ்வார் மோட்சம்

அதனைத்தொடர்ந்து ேநற்று காலை 5 மணி முதல் 6 மணி வரை உற்சவர் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நடைபெற்றது. பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிரு நாமமும், துளசி மாலையும் தரித்து காட்சியளித்தார்.

அதன்பின்னர், நம்மாழ்வாரை அச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர். அதன்பின்னர், நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர்.

பின்னர் நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை தூக்கி காண்பித்து மோட்சம் அடைந்ததாக தெரிவித்தனர். அப்போது நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசி மாலையும் அணிவிக்கப்பட்டது. பின்னர் காலை 6 மணிமுதல் காலை 9 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

இயற்பா பிரபந்தம்

அதன்பிறகு, மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணிவரை சாற்றுமறையும் நடைபெற்றது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக சென்னையில் தடையை மீறி யார் பேனர் வைத்தாலும் கடும் நடவடிக்கை
சென்னை ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக, சென்னையில் தடையை மீறி யார் பேனர் வைத்தாலும் கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறினார்.
2. ஜெயங்கொண்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் சார்பில் ஜெயங்கொண்டம் பஸ் நிறுத்தத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
3. விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி
விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது நெல்லில் தமிழ் எழுத்துகளை எழுதி குழந்தைகள் வழிபட்டனர்.
4. கொரோனா பரவல் எதிரொலி: பெரும்பாலான கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி ரத்து
கொரோனா பரவல் எதிரொலியாக பெரும்பாலான கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
5. பாளையங்கோட்டையில் கை கழுவுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாளையங்கோட்டையில் கை கழுவுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை