மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை கடலூர் கோர்ட்டு தீர்ப்பு + "||" + Cuddalore: A Cuddalore court has sentenced a teenager to 10 years in prison for abducting and raping a girl

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை கடலூர் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை கடலூர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கடலூர், 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேற்கு வன்னியர் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மகன் விஜயகுமார் (வயது 26) . இவருக்கும் கடலூர் சுப்புராயலு நகரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2018- ம் ஆண்டு விஜயகுமார், அந்த சிறுமியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி, நடந்த சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுபற்றி கடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

10 ஆண்டு சிறை

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி கடலூர் போக்சோ சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதி எம்.எழிலரசி தனது தீர்ப்பில், சிறுமியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்த விஜயகுமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். .

தொடர்புடைய செய்திகள்

1. பாபா் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிக்கு ‘லோக்ஆயுக்தா’ பணி
பாபா் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிக்கு ‘லோக்ஆயுக்தா’ பணி வழங்கப்பட்டுள்ளது.
2. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை திருவாரூர் கோர்ட்டு தீர்ப்பு
திருவாரூர் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
3. மூதாட்டி கொலை வழக்கில் வீட்டு வேலைக்காரருக்கு ஆயுள் தண்டனை செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
மூதாட்டி கொலை வழக்கில் வீட்டு வேலைக்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
4. 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: புதுமாப்பிள்ளைக்கு 10 ஆண்டு ஜெயில் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புதுமாப்பிள்ளைக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
5. முதல்-அமைச்சர் குறித்து அவதூறு கருத்து: மு.க.ஸ்டாலின் ஆஜராக 'சம்மன்' சென்னை கோர்ட்டு உத்தரவு
முதல்-அமைச்சர் குறித்து அவதூறு கருத்து: மு.க.ஸ்டாலின் ஆஜராக 'சம்மன்' சென்னை கோர்ட்டு உத்தரவு.