மாவட்ட செய்திகள்

வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே 3 அடுக்கு நவீன வாகன நிறுத்துமிடம் கட்டிட பணிகள் நிறைவு - அமைச்சர் கே.சி. வீரமணி ஆய்வு + "||" + Near Vellore New Bus Stand Completion of construction of 3 storey modern parking lot - Minister K.C. Veeramani study

வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே 3 அடுக்கு நவீன வாகன நிறுத்துமிடம் கட்டிட பணிகள் நிறைவு - அமைச்சர் கே.சி. வீரமணி ஆய்வு

வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே 3 அடுக்கு நவீன வாகன நிறுத்துமிடம் கட்டிட பணிகள் நிறைவு - அமைச்சர் கே.சி. வீரமணி ஆய்வு
வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே நிறைவடைந்த 3 அடுக்கு நவீன வாகன நிறுத்துமிடம் கட்டிட பணிகளை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று ஆய்வு செய்தார்.
வேலூர்,

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பஸ்நிலையத்தின் அருகே ரூ.11 கோடி மதிப்பில் 3 அடுக்கு நவீன வாகன நிறுத்துமிட கட்டுமான பணி கடந்தாண்டு தொடங்கியது. 6 ஆயிரத்து 662 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீத்தடுப்பு உபகரணங்கள், கழிப்பறை, ஓய்வறை, அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இங்கு 1,059 இருசக்கர வாகனங்கள், 42 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்க முடியும். இந்த வாகன நிறுத்துமிடம் கட்டிட பணிகள் நிறைவடைந்து விட்டன. தற்போது கட்டிடத்திற்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.

இந்த நவீன வாகன நிறுத்துமிடத்தை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று ஆய்வு செய்தார். 3 அடுக்கு மாடிகளையும் பார்வையிட்ட அமைச்சர், மீதமுள்ள பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வாகன நிறுத்துமிடத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். மேலும் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை, சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆய்வின்போது, கலெக்டர் சண்முகசுந்தரம், மாநகராட்சி கமிஷனர் சங்கரன், என்ஜினீயர் சீனிவாசன், நகர்நல அலுவலர் சித்ரசேனா, காட்பாடி அரசுப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு, அறங்காவல் குழுத்தலைவர் ஜெயபிரகாஷ், நிலவள வங்கி இயக்குனர் ஜனனி சதீஷ்குமார், தாசில்தார் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜோலார்பேட்டை அருகே, மூக்கனூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா- அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்
ஜோலார்பேட்டை அருகே மூக்கனூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். காளைகள் முட்டி 45 பேர் காயம் அடைந்தனர்.
2. வாணியம்பாடி அருகே, மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விபத்து - காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்
வாணியம்பாடி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அமைச்சர் கே.சி.வீரமணி அனுப்பி வைத்தார்.
3. குடியாத்தத்தில் 738 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியில் நலத்திட்ட உதவி; அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
குடியாத்தத்தில் ரூ.5½ கோடியில் புதிய கட்டிடங்களுக்கு பூமிபூஜை செய்து, 738 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
4. திருப்பத்தூர் சின்னராஜ் நாயுடு சூப்பர் மார்க்கெட், நாட்டு மருந்துக்கடை திறப்பு விழா - அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு
திருப்பத்தூர் சின்னராஜ் நாயுடு சூப்பர் மார்க்கெட் மற்றும் நாட்டு மருந்துக்கடை திறப்பு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று விற்பனையைத் தொடங்கி வைத்தார்.