மாவட்ட செய்திகள்

நடிகை குட்டி ராதிகா, யார் என தெரியாது; கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி + "||" + Actress Kutty Radhika, who is not known; Former Karnataka Chief Minister Kumaraswamy

நடிகை குட்டி ராதிகா, யார் என தெரியாது; கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி

நடிகை குட்டி ராதிகா, யார் என தெரியாது; கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குட்டி ராதிகாவை தெரியாது என கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா நீலகெரே கிராமத்தில் குடிநீர் திட்டப் பணிகள் தொடக்க விழா நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான எச்.டி.குமாரசாமி கலந்துகொண்டு, குடிநீர் திட்டத்தை தொடங்கிவைத்தார். பின்னர் அவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைதான யுவராஜ், நடிகை குட்டி ராதிகாவுக்கு ரூ.1½ கோடி வழங்கிய விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது குமாரசாமி, நடிகை குட்டி ராதிகா யார்?. அவர் யார் என்று எனக்கு தெரியாது என கூறினார்.

தொடர்ந்து பேசிய குமாரசாமி, மக்கள் ஆசியுடன் நான் முதல்-மந்திரியாக இருந்தேன். அப்போது மண்டியா மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கினேன்.

ஆனால் பா.ஜனதா அரசு அந்த நிதியை வேற மாவட்டத்திற்கு மாற்றிவிட்டது. 2023-ம் ஆண்டு கர்நாடகத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆட்சி அமைக்கும். அதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என்றார். நடிகை குட்டி ராதிகாவை, குமாரசாமி 2-வது திருமணம் செய்திருந்தார். பின்னர் அவரை விட்டு குமாரசாமி பிரிந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் தனக்கு குட்டி ராதிகாவை தெரியாது என கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டவிரோத கல்குவாரிகளால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி
சட்டவிரோத கல்குவாரிகளால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வலியுறுத்தி உள்ளார்.
2. காவிரி உபரி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு எதிர்க்கிறது; கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு
காவிரி உபரி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால் மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
3. கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் ஜனதாதளம் (எஸ்) கட்சி போட்டியிடும்: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி
கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் ஜனதாதளம் (எஸ்) கட்சி போட்டியிடும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
4. ஜனதாதளம் (எஸ்) கட்சியை யாராலும் அழிக்க முடியாது; முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேச்சு
ஜனதாதளம் (எஸ்) கட்சியை யாராலும் அழிக்க முடியாது என பாகல்கோட்டை மாநாட்டில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்தார்.
5. பெங்களூருவில், மந்திரி ஜெகதீஷ் ஷெட்டருடன் குமாரசாமி திடீர் சந்திப்பு - மண்டியா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
பெங்களூருவில் நேற்று மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரை முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி திடீரென்று சந்தித்து பேசினார். அப்போது மண்டியா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும்படி அவர் கோரிக்கை வைத்துள்ளார்.