மாவட்ட செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் + "||" + Sami darshan with devotees worshiping Pradosa at Shiva temples in Thiruvarur district

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகே உள்ளஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், நந்திகேஸ்வரர் ஆகிய சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நரிக்குடிஎமனேஸ்வரர்கோவில், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில், நீடாமங்கலம் காசிவிசுவநாதர்கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

குடவாசல், வடுவூர்

இதேபோல் குடவாசல் சத்ரு சம்ஹார மூர்த்தி கோவிலில் பிரதோஷம் நடைபெற்றது. அப்போது நந்தி பகவானுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வடுவூர் வடபாதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள கைலாசநாதர், வடிவழகி அம்மன், நந்தியம் பெருமாளுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

பிரதோஷத்தையொட்டி மன்னார்குடியில் உள்ள அண்ணாமலைநாதர் கோவில், காமாட்சி அம்மன் கோவில், காசிவிசுவநாதர் கோவில், மீனாட்சி அம்மன் கோவில், கைலாசநாதர் கோவில், நீலகண்டேஸ்வரர் கோவில், ஜெயங்கொண்டநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நந்தி மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சேஷ வாகனத்தில் சாமி வீதி உலா
சேஷ வாகனத்தில் சாமி வீதி உலா வந்தார்
2. தைப்பூசத்தையொட்டி சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் தெப்பத்திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் தைப்பூசத்தையொட்டி தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
3. தமிழக சட்டமன்ற தேர்தல்: முதல்-அமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே தீர்மானிக்கும் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி
தமிழகத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே தீர்மானிக்கும் என்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.
4. புத்தாண்டின் முதல் பிரதோ‌‌ஷத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
புத்தாண்டின் முதல் பிரதோ‌‌ஷத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
5. தைப்பூச விழாவை முன்னிட்டு விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தைப்பூச விழாவை முன்னிட்டு விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை