மாவட்ட செய்திகள்

கடலூரில் மழைநீர் கால்வாய்க்குள் கவிழ்ந்த லாரி கார் சேதம் + "||" + Damage to lorry car overturned in rainwater canal in Cuddalore

கடலூரில் மழைநீர் கால்வாய்க்குள் கவிழ்ந்த லாரி கார் சேதம்

கடலூரில் மழைநீர் கால்வாய்க்குள் கவிழ்ந்த லாரி கார் சேதம்
கடலூர் கண்ணாரப்பேட்டையில் இருந்து செம்மண் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று வண்ணாரப்பாளையம் நோக்கி புறப்பட்டு சென்றது.
கடலூர்,

கடலூர் கண்ணாரப்பேட்டையில் இருந்து செம்மண் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று வண்ணாரப்பாளையம் நோக்கி புறப்பட்டு சென்றது. அந்த லாரி சில்வர் பீச் ரோடு கடலூர் சரவணபவ கூட்டுறவு அங்காடி அருகே வந்த போது, அதன் டிரைவர் சாலையோரம் லாரியை நிறுத்தினார். அப்போது சாலையோரம் இருந்த கால்வாயில் போடப்பட்ட சிமெண்டு சிலாப் உடைந்து விழுந்தது. இதில் லாரி ஒரு புறம் கவிழ்ந்தது. அப்போது அதன் அருகில் நின்ற காரின் மீது டிப்பர் சாய்ந்து விழுந்தது. இதனால் காரின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்தது. இருப்பினும் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரகடம் அருகே லாரி கவிழ்ந்து மதுபாட்டில்கள் சேதம்
பூந்தமல்லியில் இருந்து நேற்று அதிகாலை மது ஏற்றி கொண்டு ராணிப்பேட்டைக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை வழியாக சென்று கொண்டிருந்தது.
2. லாரி கவிழ்ந்து மதுபாட்டில்கள் சேதம்
பூந்தமல்லியில் இருந்து நேற்று அதிகாலை மதுபான பாட்டில்களை ஏற்றி கொண்டு ராணிப்பேட்டைக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை வழியாக ஒரகடம் அடுத்த வாரணவாசி அருகே செல்லும்போது திடீெரன டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
3. கொட்டாய் மேடு கிராமத்தில் கூரைவீடு எரிந்து சாம்பல் ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
கொட்டாய் மேடு கிராமத்தில் கூரைவீடு எரிந்து சாம்பல் ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்.
4. கல்லட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து
கேரளா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு கல்லட்டி மலைப்பாதை வழியாக சொந்த ஊர் திரும்பினர்.
5. ராமேசுவரம்: விபத்தில் சிக்கிய கார்
விபத்தில் சிக்கிய காரில் இருந்தவர்கள் காயம் அடைந்தனர்

அதிகம் வாசிக்கப்பட்டவை