மாவட்ட செய்திகள்

கார் விபத்தில் மத்திய மந்திரி காயம்: மனைவி உயிரிழப்பு - எடியூரப்பா இரங்கல் + "||" + Union Minister Shripad Naik & his wife injured after his car met with an accident near a village in Ankola Taluk of Uttara Kannada dist.

கார் விபத்தில் மத்திய மந்திரி காயம்: மனைவி உயிரிழப்பு - எடியூரப்பா இரங்கல்

கார் விபத்தில் மத்திய மந்திரி காயம்: மனைவி உயிரிழப்பு - எடியூரப்பா இரங்கல்
கர்நாடகாவில் அங்கோலா பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் காயமடைந்தார்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் அங்கோலா பகுதியில்  ஏற்பட்ட கார் விபத்தில் மத்திய ஆயுஷ் மந்திரி ஸ்ரீபாத் நாயக் காயமடைந்துள்ளார்.

கோகர்ணாவிலிருந்து யெல்லாப்பூர் சென்று கொண்டிருந்த போது உத்தர கன்னட மாவட்டத்தின் அங்கோலா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகே மத்திய ஆயூஷ் மந்திரி ஸ்ரீபாத் நாயக்கின் கார் திடீரென விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மத்திய மந்திரியின்  மனைவி உயிரிழந்த நிலையில், மந்திரி மற்றும் அவரது உதவியாளர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக 
கோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மந்திரிக்கு உரிய சிகிச்சை அளிக்க கோவா முதல்வரிடம் பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேசினார்.

மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி விஜய நாயக்கின் மறைவுக்கு கர்நாடக முதல்-மந்திரி பி.எஸ்.எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார்.