மாவட்ட செய்திகள்

திருச்சி சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா + "||" + Hanuman Jayanti Festival at Trichy Sanjeevi Anjaneyar Temple

திருச்சி சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

திருச்சி சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
திருச்சி சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா இன்று 10,008 வடைமாலை சாற்றப்படுகிறது.
திருச்சி,

ஸ்ரீராமபிரானின் தூதர் அனுமன் ஜெயந்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று அதிகாலை திருப்பள்ளி எழுச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து உலக நன்மைக்காகவும், உலகில் உள்ள அனைத்து மக்களின் தோஷ நிவர்த்திக்காகவும் மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர். பகல் 12 மணிக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியும் 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடக்கிறது. அப்போது ஆஞ்சநேயருக்கு 10,008 வடைமாலை சாற்றுப்படி வைபவம் நடக்கிறது. நாளை (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராமச்சந்திரன், அர்ச்சகர்கள் ரமேஷ், சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்போரூர் முருகன் கோவில் தேரோட்டம் கலெக்டர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
திருப்போரூர் முருகன் கோவில் தேரோட்டத்தை கலெக்டர் ஜான் லூயிஸ் கலந்து கொண்டு வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
2. திருப்போரூர் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருப்போரூர் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
3. திருப்போரூர் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருப்போரூர் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
4. கிருஷ்ணகிரியில் 300 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா ஏராளமானோர் கண்டு ரசித்தனர்
கிருஷ்ணகிரியில் 300 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா ஏராளமானோர் கண்டு ரசித்தனர்
5. காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா 17-ந்தேதி தொடங்குகிறது
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா 17-ந்தேதி தொடங்குகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை