போதைப்பொருள் வழக்கில் பிரபல பான் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
மும்பையின் கெம்ப்ஸ் கார்னர் பகுதியில் பிரபல பான் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு பல சினிமா பிரபலங்களும் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்தநிலையில் சமீபத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இங்கிலாந்தை சேர்ந்தவர் உள்ளிட்ட 3 பேரை பிடித்து 200 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய போது போதைப்பொருள் கும்பலுடன் பிரபல பான் கடையின் உரிமையாளர்களில் ஒருவரான ராம்குமார் திவாரிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
கைது
இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு ராம்குமாா் திவாரிக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இதில் நேற்று முன்தினம் அவரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் விசாரணைக்கு பிறகு நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
பிரபல பான்கடை உரிமையாளர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இருந்து துபாய் நகருக்கு வந்த பயணிகள் பஸ் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி சாலையின் தகவல் பலகையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஷேக் முகம்மது பின் ஜாயித் சாலையில் ஏற்பட்டது. மொத்தம் 17 பயணிகள் இந்த விபத்தில் பலியானார்கள்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இருந்தபோது, சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றிய பெண் ஒருவர் அவருக்கு எதிராக கடந்த 2019-ம் ஆண்டு பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.
ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள டெண்டர் முறைகேடு வழக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக இருப்பதாக கருதக்கூடாது என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.