மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் 511 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் மந்திரி ராஜேஷ் தோபே தகவல் + "||" + Minister Rajesh Tope informs that corona vaccine will be given in 511 centers in Marathaland

மராட்டியத்தில் 511 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் மந்திரி ராஜேஷ் தோபே தகவல்

மராட்டியத்தில் 511 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் மந்திரி ராஜேஷ் தோபே தகவல்
மராட்டியத்துக்கு 9 லட்சத்து 63 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி கிடைத்துள்ளது என்றும், 511 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்றும் சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.
மும்பை, 

நாட்டில் முதற்கட்டமாக 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக நேற்று நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் மூலமும், மும்பைக்கு சாலை மார்க்கமாகவும் 56.5 லட்சம் தடுப்பூசி புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியிருப்பதாவது:-

511 மையங்களில்...

இந்திய சீரம் நிறுவனத்திடம் இருந்து மராட்டியத்திற்கு 9 லட்சத்து 63 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்து சேர்ந்து உள்ளது. இந்த தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு முதல் கட்டமாக போடப்பட உள்ளது. மாநிலத்தில் 7 லட்சத்து 84 ஆயிரம் மருத்துவ பணியாளர்களின் தரவு சேகரிக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பம் உள்ள முன்கள பணியாளர்கள் இணைய தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

தடுப்பூசி இயக்கம் மாநிலத்தின் 36 மாவட்டங்களில் உள்ள 511 மையங்களில் நடைபெறும்.

இந்த அனைத்து மையங்களிலும் மின்சாரம், இன்டர்நெட் மற்றும் வெப்காஸ்டிங் சேவைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க 702 பறக்கும் படைகள் அமைப்பு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படை வீதம் மொத்தம் 702 பறக்கும் படைகள் அமைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
2. அமீரகம் ஒரு நாடல்ல; உலகமாக திகழ்ந்து வருகிறது துணை அதிபர் டுவிட்டரில் தகவல்
அமீரகம் உலகில் ஒரு நாடல்ல. மாறாக நாட்டில் ஒரு உலகமாக திகழ்ந்து வருகிறது என்று அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.
3. தியாகராயநகர், மயிலாப்பூர் பகுதிகளில் விரைவில் பணிகள் தொடங்க திட்டம் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்
தியாகராயநகர், கோடம்பாக்கம், மயிலாப்பூர் பகுதிகளில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
4. இந்திய கொரோனா தடுப்பூசிகள் 24 நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன: நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகள் இதுவரை 24 நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
5. அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் லோக் ஆயுக்தா விசாரணைக்கு பரிந்துரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
தெரு விளக்குகளை, எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரை, லோக் ஆயுக்தா விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் கூறினார்.