ஆலங்குடி அருகே, மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி - செல்போனுக்கு `சார்ஜ்' போட்டபோது பரிதாபம் + "||" + Near Alangudi, Electricity kills Youth - It's awful when you 'charge' your cell phone
ஆலங்குடி அருகே, மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி - செல்போனுக்கு `சார்ஜ்' போட்டபோது பரிதாபம்
ஆலங்குடி அருகே செல்போனுக்கு `சார்ஜ்' போட்டபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறந்தார்.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள செட்டியாபட்டி சொரியன் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மெய்யர் (வயது 30). இவர் .நேற்று தனது மொபைலுக்கு `சார்ஜ்' செய்துதற்காக சார்ஜரை வீட்டுச் சுவரில் உள்ள பிளக்கில் சொருகியுள்ளார்.
அப்போது, அதில் இருந்து வந்த மின்சாரம் மெய்யர் உடலில் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆலங்குடி பகுதியில் கடந்த 15 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சுவற்றில் பொருத்தியிருந்த சுவிட் ஈரப்பதத்துடன் இருந்துள்ளது.
இதன்காரணமாக மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதைகவனிக்காமல் சார்ஜரை பிளக்கில் சொருகியபோது, மெய்யர் மின்சாரம் பாய்ந்து இறந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து சம்பட்டிவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.