மாவட்ட செய்திகள்

அவினாசியில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் + "||" + Agricultural law copy burning protest in Avinashi

அவினாசியில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்

அவினாசியில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
அவினாசியில் நேற்று சேவூர் செல்லும் ரோட்டில் பல்வேறு கட்சியினர் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவினாசி, 

மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பாக புதிய வேளாண் திருத்த மசோ தாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இதனை கண்டித்தும், மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தியும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பல நாட்களாக தலைநகர் டெல்லியில் முகாமிட்டு பல்வேறு கட்டங்களாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக போகிப்பண்டிகையை திருநாளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் அவினாசியில் வேளாண் சட்ட நகல் எரித்து கண்டன கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சி நிர்வாகிகள்

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸடு் கட்சி சார்பில் பி.முத்துச்சாமி, விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் எஸ்.வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் இஷாக், ஒன்றியக்குழு உறுப்பினர் மோகன், செல்வராஜ் காங்கிரஸ் கட்சி சார்பில் வக்கீல் கோபாலகிருஷ்ணன், மணி,ம.தி.மு.க. சார்பில் சுப்பிரமணி, பாபு, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி சார்பில் லோகநாதன், ராஜ்குமார், தி.மு.க.சார்பில் பழனிச்சாமி, பொன்னுச்சாமி, பால்ராஜ் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் காஞ்சீபுரம் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
2. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து சமத்துவ மக்கள் கழகத்தினர் ஒப்பாரி போராட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சமத்துவ மக்கள் கழக மகளிர் அணி சார்பில் திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஒப்பாரி வைக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்
4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
4. திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் ஆகிய 4 மண்டலங்களில் குப்பைகள் சேகரிப்பது, மக்கும் குப்பைகளை தரம் பிரிப்பது போன்ற பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
5. பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் உண்ணாவிரத போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி தற்காலிக நர்சுகள் நேற்று டி.எம்.எஸ் வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை