பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சீற்றம்: 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை + "||" + Sea rage in Parangipettai area: Fishermen did not go fishing for the 3rd day
பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சீற்றம்: 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சிற்றத்துடன் காண்படுவதால், நேற்று 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
பரங்கிப்பேட்டை,
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டமாக இருக்கும் கடலூரிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பரங்கிப்பேட்டை பகுதியில் தொடர்ந்த கடல் சீற்றத்துடனே காணப்பட்டு வருகிறது.
20 கிராம மீனவர்கள்
எனவே பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த அண்ணங்கோவில், புதுப்பேட்டை , புதுக்குப்பம், வேலைகரன் பேட்டை, சாமியார் பேட்டை, குமாரபேட்டை, மடவாபள்ளம், அய்யம்பேட்டை , அன்னப்பன்பேட்டை, நஞ்சலிங்கம் பேட்டை, பேட்டோடை, பெரியகுப்பம் மற்றும் எம்.ஜி.ஆர். திட்டு, சூர்யாநகர், முடசல்ஓடை, சின்னவாய்க்கால், பில்லமேடு, பட்டறையடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு கடந்த 11-ந்தேதி முதல் மீன்பிடிக்க செல்லவில்லை. நேற்று தொடர்ந்து 3-வது நாளாக இவர்களது மீன்பிடி தொழில் பாதிப்புக்கு உள்ளானது.
வெறிச்சோடியது
இதனால் படகுகள் அனைத்தும் அண்ணன்கோவில் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததன் காரணமாக, அண்ணன்கோவில் மீன்பிடி தளம் மற்றும் எம்.ஜி.ஆர். திட்டு தளம் ஆகியன வெறிச்சோடி காணப்படுகிறது.
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து கொன்று விட்டதாக கூறி கோட்டைப்பட்டினத்தில் மறியல் ேபாராட்டம் நடைபெற்றது. இதனால், மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது.