மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் + "||" + Farmers carrying black flags protest in the fields demanding relief for paddy fields affected by continuous rains

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக எரவாஞ்சேரி, மருங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி அழுகி வருகிறது.

பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். சதவீத அடிப்படையில் நிவாரணம் வழங்குவதை தமிழக அரசு கைவிட்டு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும்.

வயலில் இறங்கி போராட்டம்

ஈரப்பதம் கணக்கிடாமல் நெல்லை கொள்முதல் செய்யவேண்டும் என வலியுறுத்தி மருங்கூர் மற்றும் எரவாஞ்சேரி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மருங்கூர் ஊராட்சி விவசாய சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்க செயலாளர் முத்து தியாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், விவசாய சங்க பிரதிநிதிகள் நாகராஜ் அய்யர், ஏசுராஜேந்திரன், குருமூர்த்தி, சேகர், ராஜி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிவாரணம் வழங்க வேண்டும்

அதேபோல் எரவாஞ்சேரியில் விவசாய சங்க செயலாளர் பாலு, ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் அனைவருக்கும் கணக்கெடுப்பு ஏதும் செய்யாமல் 100 சதவீதம் இன்சூரன்ஸ் மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வடகுடி கிராமம்

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 85 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்து அழுகி வருகிறது. நாகையை அடுத்த வடகுடி கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 1500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிர் பாதிப்புகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாதிக்கபட்ட பகுதிகளை ஆய்வு செய்து, பயிர் பாதிப்புகளை இதுவரை கணக்கெடுப்பு நடத்தாதை கண்டித்தும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. நீடாமங்கலம் பகுதியில் விளைநிலங்கள் பாசன வசதி பெற ஆறுகளை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
நீடாமங்கலம் பகுதியில் விளை நிலங்கள் பாசன வசதி பெற ஆறுகளை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. சீர்காழி பகுதியில் தொடர் மழையால் உளுந்து அறுவடை பணி பாதிப்பு விவசாயிகள் கவலை
சீர்காழி பகுதியில் பெய்த தொடர் மழையால் உளுந்து அறுவடை பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
3. ஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிராக போராடிய பத்திரிகை அதிபருக்கு சிறை
சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் கடந்த 2019-ம் ஆண்டு சீனாவுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.
4. கொரடாச்சேரி ஒன்றியத்தில் கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம்
கொரடாச்சேரி ஒன்றியத்தில், கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
5. சாதகமற்ற சீதோஷ்ண நிலையால் பயறு, உளுந்து விளைச்சல் குறைவு கொள்முதல் விலையும் குறைந்து விட்டதால் விவசாயிகள் கவலை
சாதகமற்ற சீதோஷ்ண நிலையால் பயறு, உளுந்து விளைச்சல் குறைந்து விட்டது. கொள்முதல் விலையும் குறைந்து விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை