மாவட்ட செய்திகள்

சேலத்தில், அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம் + "||" + In Salem, the AIADMK On behalf of M.G.R. Birthday Celebration

சேலத்தில், அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

சேலத்தில், அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
சேலம், 

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள மணிமண்டபத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவச்சிலைகள் மாலைகள் அணிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் மணி மண்டபம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அதன் அருகில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார்.

ஊர்வலம்

முன்னதாக சேலம் 4 ரோட்டில் இருந்து அண்ணா பூங்கா வரை அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானவர்கள் ஊர்வலமாக அண்ணா பூங்காவிற்கு வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், மனோன்மணி, முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், சேலம் மாநகராட்சி முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் துணை மேயர் நடேசன், மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், பகுதி செயலாளர்கள் சரவணன், யாதவ மூர்த்தி, சண்முகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ராஜேந்திரன், ஜான் கென்னடி, கண்ணன், அஸ்தம்பட்டி பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் மண்டல குழு தலைவர் மோகன் உள்பட அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை பல்கலைக்கழக 163-வது பட்டமளிப்பு விழா 1,37,745 பேருக்கு கவர்னர் பட்டங்களை வழங்கினார்
சென்னை பல்கலைக்கழகத்தின் 163-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 745 பேருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார்.
2. பிறந்த நாள் கொண்டாட்டத்தில் திடீர் மோதல்; 3 பேர் கைது
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட திடீர் மோதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. நன்னிலம், மன்னார்குடி பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
நன்னிலம், மன்னார்குடி பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
4. திருவாரூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
திருவாரூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா அ.தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் நடந்தது.
5. திருப்போரூர் முருகன் கோவில் தேரோட்டம் கலெக்டர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
திருப்போரூர் முருகன் கோவில் தேரோட்டத்தை கலெக்டர் ஜான் லூயிஸ் கலந்து கொண்டு வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை