மாவட்ட செய்திகள்

கூட்டத்தில் இருந்து பாதியில் எழுந்து வந்து மாற்றுத்திறனாளி பெண்களிடம் மனு வாங்கிய போலீஸ் சூப்பிரண்டு பொதுமக்கள் பாராட்டு + "||" + The police superintendent praised the public for getting up halfway through the meeting and petitioning disabled women

கூட்டத்தில் இருந்து பாதியில் எழுந்து வந்து மாற்றுத்திறனாளி பெண்களிடம் மனு வாங்கிய போலீஸ் சூப்பிரண்டு பொதுமக்கள் பாராட்டு

கூட்டத்தில் இருந்து பாதியில் எழுந்து வந்து மாற்றுத்திறனாளி பெண்களிடம் மனு வாங்கிய போலீஸ் சூப்பிரண்டு பொதுமக்கள் பாராட்டு
கூட்டத்தில் இருந்து பாதியில் எழுந்து வந்து மாற்றுத்திறனாளி பெண்களிடம் மனு வாங்கிய போலீஸ் சூப்பிரண்டை பொதுமக்கள் பாராட்டினர்.
நாகர்கோவில்,

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தினமும் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்த மனுக்களை பெற்று அது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்றும் ஏராளமான பொதுமக்கள் மனு அளிப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

அவ்வாறு வந்தவர்களில் 2 மாற்றுத்திறனாளி பெண்களும் இருந்தனர். அந்த பெண்களால் நடக்க முடியாத நிலையில் கீழ் தளத்தில் அமர்ந்திருந்தனர்.

மனுக்கள் வாங்கினார்

அந்த சமயத்தில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் முதல் தளத்தில் போலீசாருடனான ஆலோசனை கூட்டத்தில் இருந்தார். இந்த நிலையில் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண்கள் மனு அளிப்பதற்காக காத்திருப்பதை அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உடனடியாக கூட்டத்தில் இருந்து பாதியில் எழுந்து தரைதளத்துக்கு வந்தார்.

அங்கு காத்திருந்த மாற்றுத்திறனாளி பெண்களிடம் மனுவை வாங்கி குறைகளை கேட்டார். பின்னர் அவர்கள் அளித்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அவருடைய செயலை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினா்.

தொடர்புடைய செய்திகள்

1. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உரிய கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்: மத்திய அரசு
அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதி உள்ளார்.
2. சிறுபான்மையினர் நலன் காக்க கருணாநிதி வழியில் பாடுபடும் மு.க.ஸ்டாலின் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பாராட்டு
சிறுபான்மையினர் நலன் காக்க கருணாநிதி வழியில் பாடுபடும் மு.க.ஸ்டாலின் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பாராட்டு.
3. முகலிவாக்கத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் உண்ணாவிரதம்
முகலிவாக்கத்தில் குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. பொதுமக்களிடம் இன்று நேரடியாக மனுக்களை பெறுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களிடம் இன்று நேரடியாக மனுக்களைப் பெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
5. சாலையில் தவறவிட்ட ரூ.1½ லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர் போலீசார் பாராட்டு
சாலையில் தவறவிட்ட ரூ.1½ லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர் போலீசார் பாராட்டு.