மாவட்ட செய்திகள்

வங்கியில் கண்ணாடியை அடித்து நொறுக்கிய வாலிபர் + "||" + The young man who smashed the glass in the bank

வங்கியில் கண்ணாடியை அடித்து நொறுக்கிய வாலிபர்

வங்கியில் கண்ணாடியை அடித்து நொறுக்கிய வாலிபர்
வங்கியில் கண்ணாடியை வாலிபர் ஒருவர் அடித்து நொறுக்கிச்சென்றார்.
பொன்மலைப்பட்டி, 

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் அந்த வங்கிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தான் வைத்திருந்த அரிவாளால் வங்கி மேலாளர் அறையின் கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்று தப்பி விட்டார். 

இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு பொன்மலை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து, அந்த மர்ம வாலிபர் யார்? எதற்காக இவ்வாறு நடந்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சமூக இடைவெளி கடைபிடிக்காத வங்கி, கடைகளுக்கு அபராதம்
சமூக இடைவெளி கடைபிடிக்காத வங்கி, கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
2. அதிகாரி- ஊழியர்களுக்கு கொரோனா; வங்கி மூடல்
அதிகாரி-ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் வங்கி மூடப்பட்டது.
3. சென்னை விமான நிலையத்தில் வாலிபர் கைது பயங்கரவாத பயிற்சி பெற்றவரா? அதிகாரிகள் விசாரணை
தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று வந்த வாலிபர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஏமனில் பயங்கரவாத பயிற்சி பெற்றாரா? என அவரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
4. நகை பறித்த வாலிபர் கைது
நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. பெரம்பலூாில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூாில் பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.