மாவட்ட செய்திகள்

சோளிங்கர், முனீஸ்வரன் கோவிலில் 10-ம் ஆண்டு விழா + "||" + solingar, 10th Anniversary Celebration at Muneeswaran Temple

சோளிங்கர், முனீஸ்வரன் கோவிலில் 10-ம் ஆண்டு விழா

சோளிங்கர், முனீஸ்வரன் கோவிலில் 10-ம் ஆண்டு விழா
சோளிங்கரில் முனீஸ்வரன் கோவிலில் ஆண்டு விழா நடந்தது.
சோளிங்கர்,

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பழமையான முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 10-ம் ஆண்டு பெருவிழா இன்று நடைபெற்றது.

 விழாவையொட்டி மூலவரான முனீஸ்வர சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 13 அடி உயரமுள்ள வாமுனி செம்முனி சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. 

விழாவில் சென்னை, கர்நாடகா, ஆந்திரா பகுதியில் இருந்தும், சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை