மாவட்ட செய்திகள்

அங்கன்வாடி பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccine for Anganwadi workers

அங்கன்வாடி பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

அங்கன்வாடி பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
அங்கன்வாடி பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணி, ெகாளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட பொது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதாராணி தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூமா முன்னிலை வகித்தார். இதில் சுமார் 200 பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது பற்றி வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி கூறுகையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பக்க விளைவு ஏற்படவில்லை. அவர்கள் ஆரோக்கியத்துடன் உள்ளனர். எனவே பொதுமக்கள் அச்சத்தை தவிர்த்து, தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. 5-வது நாளாக தொடர்ந்த அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டம் ஒத்திவைப்பு தி.மு.க. மாவட்ட செயலாளர் சந்திப்பு
5-வது நாளாக தொடர்ந்த அங்கன்வாடி பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் அவர்களை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி சந்தித்து பேசினார்.
2. கொரோனா தடுப்பூசி போடும்படி அதிகாரிகள் மிரட்டல்: கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க குவிந்த அங்கன்வாடி ஊழியர்கள்
கொரோனா தடுப்பூசி போடும்படி அதிகாரிகள் மிரட்டல்: கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க குவிந்த அங்கன்வாடி ஊழியர்கள்.