மாவட்ட செய்திகள்

போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது + "||" + Worker arrested under Pocso Act

போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்
கந்தம்பாளையம், 

கந்தம்பாளையம் அருகே உள்ள கூடச்சேரி மேலப்பட்டி போயர் தெருவை சேர்ந்த கொண்டன் மகன் சந்தோஷ்குமார் (வயது 21). இவர் கூலி வேலை செய்து வருகிறார். 

சந்தோஷ்குமாருக்கும், பிளஸ்-1 மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் அவர் அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றார். இதனால் மகளை காணாத அவளது தாய் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். 

இந்தநிலையில் நேற்று இருவரும் திருச்செங்கோட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் செல்வதாக நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இருவரையும் மணியனூர் பஸ் நிறுத்தத்தில் போலீசார் மடக்கிப்பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தோஷ் குமாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மாணவியை பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தர பிரதேசத்தில் அதிரடி சோதனை; ஐ.எஸ்.ஐ. ஆதரவு அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது
உத்தர பிரதேசத்தில் பயங்கரவாத ஒழிப்பு படையினர் ஐ.எஸ்.ஐ. ஆதரவு அமைப்பினை கண்டறிந்ததுடன் 3 பேரை கைது செய்துள்ளனர்.
2. குன்றத்தூர் அருகே திருட்டுத்தனமாக சவுடு மண் அள்ளிய 5 பேர் கைது
குன்றத்தூர் அருகே திருட்டுத்தனமாக சவுடு மண் அள்ளிய 5 பேர் கைது 5 லாரிகள், 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல்.
3. சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவரை வெட்டுவதற்காக விரட்டிய கும்பல் கைது
சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவரை வெட்டுவதற்காக விரட்டிய கும்பல் கைது.
4. பீகாரில் ரூ.3 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; 3 பேர் கைது
பீகாரில் ரூ.3 கோடி மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்து 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
5. திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தி விற்ற 2 வாலிபர்கள் கைது
திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தி விற்ற 2 வாலிபர்கள் கைது.