மாவட்ட செய்திகள்

வேலூர்; தீயில் கருகிய பள்ளி மாணவி சாவு + "||" + Vellore; Schoolgirl burnt to death in fire

வேலூர்; தீயில் கருகிய பள்ளி மாணவி சாவு

வேலூர்; தீயில் கருகிய பள்ளி மாணவி சாவு
வேலூரில் தீயில் கருகி பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர்

வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முகார்பாஷா. இவருடைய மகள் பர்வீன்பானு (வயது 15). இவர், கொணவட்டம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். 

கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி பர்வீன்பானு வீட்டில் மண்எண்ணெய் அடுப்பில் வெந்நீர் வைக்க முயன்றார். 

அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் சுடிதாரில் தீப்பிடித்து, உடல் முழுவதும் பரவி எரிந்தது. இதனால் பர்வீன்பானு அலறி துடித்தார். அலறல் சத்தத்தைக் கேட்ட குடும்பத்தினர், அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுவி அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பர்வீன்பானு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வேலூர் வடக்குப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி சாவு
கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி உயிரிழந்தார்

அதிகம் வாசிக்கப்பட்டவை