மாவட்ட செய்திகள்

கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு இந்து அமைப்பினர் நினைவு அஞ்சலி செலுத்தினர் + "||" + Tribute to the memory of the Hindu organization

கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு இந்து அமைப்பினர் நினைவு அஞ்சலி செலுத்தினர்

கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு இந்து அமைப்பினர் நினைவு அஞ்சலி செலுத்தினர்
கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு இந்து அமைப்பினர் நினைவு அஞ்சலி செலுத்தினர். இதில் பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் பங்கேற்றார்.
கோவை,


கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் நேற்று நடைபெற்றது. பாரதீய ஜனதா மற்றும் இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், சென்னையில் பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சி முடிவடைந்ததும் விமானம் மூலம் கோவை வந்தார். 

எல்.முருகன் பங்கேற்பு

நிகழ்ச்சிக்கு பாரதீய ஜனதா மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கேரள மாநில இந்து தர்ம அமைப்பின் மாநில தலைவர் சசிகலா டீச்சர், பாரதீய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்று நினைவு அஞ்சலி கூட்டத்தில் பேசினார்கள்.

போலீசார் பாதுகாப்பு

கூட்டத்தில் இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர், விசுவ இந்து பரிஷத் மாநில செயலாளர் லட்சுமணன் நாராயணன், பாரதீய ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, இந்து  முன்னணியை சேர்ந்த குணா, தனபால் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

இது தவிர இந்து மக்கள் கட்சி, பாரத் சேனா, சிவசேனா, இந்து மகாசபா, ராமர் சேனா, சங்பரிவார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியையொட்டி கோவையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

தொடர்புடைய செய்திகள்

1. பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு டி.ஜி.பி. அஞ்சலி
பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு டி.ஜி.பி. அஞ்சலி.
2. ஷங்கர் படத்தில், அஞ்சலி
ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
3. நாளை 3-ம் ஆண்டு நினைவு நாள்: கருணாநிதியின் உருவப்படத்தை வீட்டு வாசலில் வைத்தே புகழ் வணக்கம் செலுத்துவோம்
3-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (சனிக்கிழமை) கடைபிடிக்கப்படுவதையொட்டி, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை வீட்டு வாசலில் வைத்தே புகழ் வணக்கம் செலுத்துவோம் என்று தி.மு.க.வினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. கொரோனாவால் பலியான டாக்டர் சைமன் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மறு அடக்கம் குடும்பத்தினர் அஞ்சலி
டாக்டர் சைமன் ஹெர்குலஸ் உடல் வேலங்காடு மயானத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் 15 மாதங்களுக்கு பின்னர் மறு அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு குடும்பத்தினர் கண்ணீர்மல்க உருக்கமாக அஞ்சலி செலுத்தினார்கள்.
5. மறைந்த வே.ஆனைமுத்து உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி
சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் ஆனைமுத்து (வயது 96). மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி தலைவரான இவர், நேற்று உடல் நலக்குறைவு காரணமாக புதுச்சேரியில் உயிரிழந்தார்.