மாவட்ட செய்திகள்

காரைக்காலில் வீட்டை உடைத்து நகை திருட்டு + "||" + Breaking the door of the house and stealing jewelry, money

காரைக்காலில் வீட்டை உடைத்து நகை திருட்டு

காரைக்காலில் வீட்டை உடைத்து நகை திருட்டு
காரைக்காலில் வீட்டை உடைத்து நகை திருட்டு போனது.
காரைக்காலை அடுத்த நிரவி கீழஒடுதுறையை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி நிர்மலா. இவர்களது மகள் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதனால் கணவன், மனைவி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.  நேற்று முன்தினம் இரவு தம்பதியினர் சாப்பிட்டுவிட்டு தூங்கினர். நேற்று காலை இருவரும் எழுந்து எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அலமாரியில் வைத்திருந்த 6 பவுன்தங்க நகை, வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது.

வீட்டில் தம்பதியினர் அயர்ந்து தூங்கிய நேரத்தில், மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்கால் நிரவி போலீஸ் நிலையத்தில் நடராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.