மாவட்ட செய்திகள்

சேலம் இரும்பாலை அருகே கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை + "||" + theft

சேலம் இரும்பாலை அருகே கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை

சேலம் இரும்பாலை அருகே கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை
சேலம் இரும்பாலை அருகே உள்ள ஆரியகவுண்டம்பட்டி பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த 3 பவுன் சங்கிலி, வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.  இது குறித்த புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.