மாவட்ட செய்திகள்

4-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Revenue officials protest on the 4th day

4-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

4-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகையில், 4-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகையில், 4-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 4-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேதையன் தலைமை தாங்கினார். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருணை அடிப்படையில் நியமனதாரர்களின் பணியினை ஒரே அரசாணையில் வரன்முறை செய்து ஆணையிட கலெக்டருக்கு அதிகாரம் வழங்க வேண்டும். மாவட்டங்களில் அதிகளவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவுரு எழுத்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
 பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்திரவாதம் செய்து உடனே தீர்வு காண வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். 
ஓய்வூதியம்
பேரிடர் மேலாண்மை மற்றும் நேர்முக உதவியாளர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய  ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.