மாவட்ட செய்திகள்

பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration by graduate teachers

பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில தலைவர் செல்லையா, மாநில துணைத்தலைவர் இந்திரா ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 2004-2006 தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும், தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பெற்று வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்துக்கான அரசாணைகளை உடனே திரும்ப பெற வேண்டும், தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் குருமூர்த்தி, அன்பழகன், ஹரிதாஸ், செல்வதுரை, பிரபாகரன், கோகிலா, உஷா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.